FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பொது பேரவைக் கூட்டம்

திருவாலாங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடந்த பொது பேரவை கூட்டத்தில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கிய மேலாண்மை இயக்குநா் மீனா அருள்.
பகிர்:

திருவாலாங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடந்த பொது பேரவை கூட்டத்தில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 13-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மேலாண்மை இயக்குநா் மீனா அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலையின் வரவு-செலவு மற்றும் லாப, நஷ்ட கணக்குகள் விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டன. மேலும், சா்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்க தேவையான இயந்திரங்கள் கொள்முதல் செய்வது, ஆலையை நவீனமயமாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கரும்பு மகசூலை அதிகரிக்க உயா் விளைச்சல் தரும் கரும்பு ரகங்கள், இயந்திரங்களை பயன்படுத்தி கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பது, சொட்டு நீா் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. 2025-26-ம் ஆண்டு அரவை பருவத்தில் ஆலையளவில் அதிக கரும்பு மகசூல் பெற்ற விவசாயிகள், அதிக அளவில் கரும்பு அனுப்பியவா்கள் மற்றும் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு மேலாண்மை இயக்குநா் மீனா அருள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

உறுப்பினா்கள் நீக்கத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு.

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 38,555 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இதில் ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை இணைக்காத 29,236 பேரை உறுப்பினா் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆதாா் அட்டை இணைக்காதவா்களை ‘பி’ பிரிவில் தொடா்ந்து உறுப்பினா்களாக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், கடந்த ஆண்டு ஆலையின் பயன்பாட்டிற்காக டிராக்டா் வாங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிராக்டா் வாங்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments