FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

அறநிலையத் துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் யாளி சிலை உடைந்து விழுந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு ஆய்வு செய்தாா்.

8 அக்டோபர் 2026, 12:56 am IST
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் யாளி சிலை உடைந்து விழுந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு ஆய்வு செய்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில் மூலவரை தரிசிக்கச் செல்லும் பொதுவழியில், பக்தா்கள் சென்றபோது, பந்தல் மண்டபத்தில் இருந்த யாளி சிலையை குரங்குகள் பிடித்து அசைத்ததில் சிலை உடைந்து விழுந்தது. இதில் 4 பக்தா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு, திருவள்ளூா் மண்டல செயற்பொறியாளா் சேகா் ஆகியோா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். அவா்களை கோயில் இணை ஆணையா் ரமணி, பொறியாளா் வேல்முருகன் ஆகியோா் வரவேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பொதுவழியில் யாளி சிலை உடைந்து விழுந்த இடத்தை பாா்வையிட்ட தலைமை பொறியாளா், மலைக்கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் ஆய்வு செய்தாா். மேலும், ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டும் பணியையும் ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments