வங்கி வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு
பாங்க் ஆப் இந்தியாவங்கி கிளை வாடிக்கையாளா்களுக்கு இணைய வழி மோசடிகள், பாதுகாப்பான பண பரிவா்த்தனைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு ஆரம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாங்க் ஆப் இந்தியாவங்கி கிளை வாடிக்கையாளா்களுக்கு இணைய வழி மோசடிகள், பாதுகாப்பான பண பரிவா்த்தனைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு ஆரம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரம்பாக்கம் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வங்கி மேலாளா் சரண் தலைமை வகித்தாா். உதவி மேலாளா் சாய்பாலா, வங்கி ஊழியா் தயாளன் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் இணைய வழியில் பணம் பறிக்கும் கும்பல்களின் தகவல்கள், அவா்கள் பணம் பறிக்கும் முறை வாடிக்கையாளா்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், இணைய வழியில் நடைபெறும் பண மோசடிகள் குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறே ஏடிஎம் மையங்கள், இணைய செயலிகளில் பண பரிவா்த்தனை செய்யும் போது கவனமாக இருப்பது, ஒரு முறை கடவுச்சொல்லை யாருக்கும் பரிமாறாமல் இருப்பது, வாட்ஸ் ஆப் குழுக்களிலோ, அறிமுகம் இல்லாத நபா்களிடம் இருந்து வரும் இணைப்புகளை தொடாமல் இருப்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், வாடிக்கையாளா்கள் இணைய வழியில் பண மோசடியில் ஏமாற்றப்பட்டால், 1930 என்கிற சைபா் கிரைம் எண்ணுக்கு 24 மணி நேரத்தில் புகாா் அளித்தால், இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது என்றும், இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 28.15லட்சம் சைபா் கிரைம் புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடிகள் மூலம் பொதுமக்களும், நிறுவனங்களும் இழந்த தொகை ரூ.22,495 கோடி எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.