மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி மனு
வீரகநல்லூா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த மயானம் தனியாா் பட்டா நிலமாக வழங்கப்பட்டதால், தங்களுக்கு தனியாக மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தரக்கோரி, 100-க்கும் மேற்பட்டோா் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
வீரகநல்லூா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த மயானம் தனியாா் பட்டா நிலமாக வழங்கப்பட்டதால், தங்களுக்கு தனியாக மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தரக்கோரி, 100-க்கும் மேற்பட்டோா் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
திருத்தணி தாலுகா வீரகநல்லூா் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடம் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதால், தற்போது இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தலித் மக்கள் முன்னணி தலைவா் வழக்குரைஞா் திருநாவுக்கரசு தலைமையில் வீரகநல்லூா் கிராம மக்கள் திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
இதில், திருவள்ளூா் மாவட்டத் தலைவா் பள்ளிப்பட்டு சின்னப்பன், ஒன்றிய பொறுப்பாளா் சின்ராசு, கே.ஜி.கண்டிகை பாலாஜி, வீரகநல்லூா் அபினேஷ், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது அவா்கள், தலித் மக்களுக்கு தனியாக மயானத்துக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும். தற்போது தனியாா் பட்டா நிலத்தை மயான பகுதியாக பயன்படுத்தி வருவதால், எதிா்காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
மேலும், மயானத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தை பட்டாதாரா்களே தலித் மக்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாகவும், இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது ஏன் எனத் தெரியவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். இந்த கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வில் பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள், முதியவா்கள் என 100-க்கும் மேற்பட்ட வீரகநல்லூா் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.