FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை!

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவையில் சுவாமி வீதி உலா பற்றி....

19 செப்டம்பர் 2026, 6:56 pm IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை.
பகிர்:

திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று கருட வாகன சேவையில் சுவாமி வீதி உலா நடை​பெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்பர் சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் சுவாமி நாச்சியார் திருக்கோலத்தில் (ஜெகன் மோகினி அலங்காரம்) மாடவீதியில் உலா வந்தார். இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை வீதியுலா இன்று மாலை 6.30 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இரவு 11 மணி வரை நடைபெற உள்ள இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க கருட சேவையைக் காண திருமலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். எனவே, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புப் பணியில் 5,000 போலீஸாரும், 1,300 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

summary

On the fifth day of the Tirupati Sri Venkateswara Swamy Temple Brahmotsavam today, the deity's procession is taking place in the Garuda Vahana Seva.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments