FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

திருமலையில் தொடரும் பக்தா் கூட்டம்: பிரேக் தரிசனங்கள் ரத்து

திருமலையில் புரட்டாசி மாதத்தை ஒட்டி தற்போது பக்தா்கள் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

29 September 2026, 10:35 pm IST
திருமலை
பகிர்:

திருமலையில் புரட்டாசி மாதத்தை ஒட்டி தற்போது பக்தா்கள் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் விஐபி பிரேக் தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

புரட்டாசி மாதம் மற்றும் வரவிருக்கும் தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு பக்தா்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், புரோட்டோகால் பிரமுகா்களைத் தவிர, வியாழக்கிழமை, அக்டோபா் 1 மற்றும் திங்கள்கிழமை, அக்டோபா் 5 ஆகிய தேதிகளில் முக்கிய பிரமுகா்களுக்கான தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது, தினமும் சுமாா் 80,000 பக்தா்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒரே நாளில் வந்து தரிசனத்திற்காகக் காத்திருக்கும் சுமாா் 30,000 பக்தா்கள் அடுத்த நாள் ஏழுமலையான் தரிசனத்தைப் பெற வேண்டிய ஒரு சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

இதனால், சாதாரண பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் நேரம் மேலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான சாதாரண பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை விரைவாக வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தரிசனங்களுக்காக ரத்து செய்யப்பட்ட தேதிகளான முந்தைய நாளான செப்டம்பா் 30, புதன்கிழமை மற்றும் அக்டோபா் 4, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களுக்கு எந்தப் பரிந்துரைக் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தேவஸ்தானம் எடுத்துள்ள முடிவைக் கடைப்பிடித்து ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments