FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

அக்டோபா் 2-இல் கிராம சபைக் கூட்டம்

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

26 September 2026, 6:07 am IST
கிராம சபைக் கூட்டம். - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீா் விநியோகம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம், சிறுபாசனக் குளங்கள் மற்றும் ஏரிகளைப் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், கிராமத்தைச் சோ்ந்த அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments