விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகத்திலும் தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்), வட்ட வழங்கல் அலுவலரால் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்ய கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு, முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோரிக்கை மனு, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்பனை செய் யப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஆகியவற்றை குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியரிடம் அளிக்கலாம்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.