FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேவூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், ஆரணியை அடுத்த சேவூரில் மக்களவைத் தேர்தலுக்கான

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், ஆரணியை அடுத்த சேவூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச் சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சேவூர் ஓசூர் அம்மன் கோயில் அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் தூசி கே.மோகன் தலைமை வகித்தார். இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு 18 பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன்படி, நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் ஆரணி தொகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அரசுத் திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி அதிமுகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இதனால், இந்தச் சாலையையொட்டி பல்வேறு தொழில்சாலைகள் அமைய வாய்ப்பு ஏற்படும். பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை முன்னேறுவதற்கான வாய்ப்பாக இந்தத் திட்டம் அமையும் என்றார்.
கூட்டத்தில், ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வி.ஏழுமலை, நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்கழகம், பிற அணி நிர்வாகிகள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, எ.அசோக்குமார், ஜி.வி.கஜேந்திரன், டி.கருணாகரன், ரமணிநீலமேகம், அ.கோவிந்தராசன், தெள்ளார் சீனிவாசன், டி.வி.பச்சியப்பன், ஜி.செல்வராஜ், கிருஷ்ணன், நாகப்பன், தங்கராஜ், ஓட்டல் பாஷா, பாண்டியன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments