வீட்டு வசதிச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை வட்ட கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்ட கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் டி.அய்யப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் ஏ.பன்னீர்செல்வம் வரவேற்றார். கூட்டத்தில், சங்கத்தின் வளர்ச்சி, உறுப்பினர்கள் நலன் கருதியும், நிதி ஆதாரங்களைப் பெருக்கவும் நகைக்கடன் வழங்குவது, பொது சேவை மையத்தை உருவாக்குவது, கட்டுமானப் பொருள்கள் விற்பனை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கப் பணியாளர்கள் ஆர்.சிவாஜி கணேசன், ஆர்.காமராஜ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.