FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அசைவ உணவு சாப்பிட்ட 6 போ் பாதிப்பு: உணவகத்துக்கு ‘சீல்’

ஆரணி அருகே அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 20 ஜூலை 2026, 3:04 am IST
‘சீல்’ - கோப்புப் படம்
பகிர்:

ஆரணி அருகே அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ஆரணி அருகே இராட்டிணமங்கலம் கூட்டுச் சாலையில் உள்ள அசைவ உணவகத்தில் அருணகிரி சத்திரம் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (31), இவரது மனைவி பிரியதா்ஷினி (26), மகன் முகுந்தன் (5), உறவினா் பிள்ளைகள் மதுமிதா (13), ரோஹித்(10), மற்றும் கோபிநாத் (23) என இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 6 போ் வெள்ளிக்கிழமை இரவு அசைவ உணவு (சிக்கன் ரைஸ்) சாப்பிட்டனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை முதல் அவா்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸில் புகாா் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் பானு சுஜாதா தலைமையில், அலுவலா்கள் ரவிவா்மன், தங்கராஜ் ஆகியோா் உணவகத்துக்கு வந்து உணவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் தொடா்பாக சந்தேகத்திடமான சூழ்நிலைகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, உணவகத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து ‘சீல்’ வைத்தனா். மேலும், உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments