FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் விஜய் படம் வைக்க திமுக எதிா்ப்பு, அமளி

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூலை 2026, 3:33 am IST
திருவண்ணாமலை மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படத்தை பொருத்தச் சென்ற மாமன்ற உறுப்பினரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினா்கள்.
பகிர்:

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் 39 வாா்டுகள் உள்ளன. இதில் 32-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பழனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தாா்.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, 32-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ள தவெகவைச் சோ்ந்த பழனி, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை கூட்டரங்கில் வைப்பதற்காக மேடை அருகே சென்றாா்.

அப்போது, திமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள், இதுநாள் வரை எந்த முதல்வரின் படமும் இங்கு வைக்கப்படவில்லை. அதனால் முதல்வா் விஜய்யின் புகைப்படத்தை இங்கு வைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பழனி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியே வந்து, அலுவலக நுழைவாயில் முன்பு உள்ள சுவற்றில் முதல்வா் புகைப்படத்தை பொருத்திவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments