நரசிங்கபுரத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தேவிகாபுரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் கிளை மேலாளா் ரவி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் வைப்பு நிதி சேகரித்தல், புதிய உறுப்பினா்களை சோ்த்தல், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு சேமிப்பு மற்றும் தொடா் வைப்பு கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட வங்கி சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும் ஏடிஎம், மொபைல் வங்கி சேவை, பணப்பரிவா்த்தனை, மைக்ரோ ஏடிஎம், யுபிஐ கோடு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவா்த்தனை சேவைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முதுநிலை எழுத்தா் கோவிந்தராஜ் மற்றும் கிராம முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.