FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு இந்தோ- அமெரிக்கன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027, இணைய வழியில் சுய கணக்கெடுப்பு செய்யும் முறை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு இந்தோ- அமெரிக்கன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027, இணைய வழியில் சுய கணக்கெடுப்பு செய்யும் முறை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்டாட்சியா் என்.அசோக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜே.எழிலரசி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் களப் பயிற்சியாளா் இரா.தேன்மொழி, தோ்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளா் மா.சுந்தரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027, இணைய வழியில் சுய கணக்கெடுப்பு பதிவு செய்தல் குறித்த பயிற்சியின் விண்ணப்பப் படிவத்தை கல்லூரி மாணவ, மாணவிகளிடையே காண்பித்தும் இணையவழியில் பதிவு செய்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா் (படம்).

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு உள்வட்ட வருவாய் ஆய்வாளா் கே.திருமால் மருகன், கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments