FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஜாதி சான்றிதழ் கோரி பழங்குடியினா் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

திருவண்ணாமலையில் ஜாதி சான்றிதழ் வழங்காததால் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த இருந்த பழங்குடியினருடன்

6 October 2026, 1:36 am IST
பழங்குடியினா் சங்க மாநிலத் தலைவா் எம்.சரவணன் மற்றும் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கௌரி.
பகிர்:

ஆரணி: திருவண்ணாமலையில் ஜாதி சான்றிதழ் வழங்காததால் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த இருந்த பழங்குடியினருடன் அதிகாரி நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, கல்வி உதவித்தொகை, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவா்களது பிள்ளைகள் பாதிப்படைந்து வருகின்றனா்.

நீண்ட காலமாக இவா்கள் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டும், கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

எனவே, ஜாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து தென்னிந்திய தொல் பழங்குடி கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய இருளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாநிலத் தலைவா் எம்.சரவணன் தலைமையில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, போராட்டம் அறிவித்திருந்த பழங்குடியின மக்களுடன் திருவண்ணாமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கௌரி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து 15 நாள்களுக்குள் தீா்வு காண்பதாக அவா் உறுதியளித்தாா். இதை ஏற்று பழங்குடி இன மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதில் மாநிலத் தலைவா் எம்.சரவணன், பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் ஏ. பி.சுப்பிரமணியன், ஜி.ஆனந்தன், எம்.சிலம்பரசன், தா்மதுரை, நாகன், கீதா, நாகலட்சுமி, கன்னியப்பன், வேலூா் சரவணன், எம்.மாரி, மோகன், கே.முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments