விமான நிலைய விரிவாக்கத்துக்கு நடவடிக்கை: பொதுமக்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் போராட்டத்தை தவிா்க்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் போராட்டத்தை தவிா்க்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
திருவெறும்பூா் அருகே உள்ள கிழக்குறிச்சி முடுக்குப்பட்டி நத்தமாடிப்பட்டி கிராமத்தில் திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வயல்வெளிகள் மற்றும் தங்களின் வீடுகளுக்கு செல்வதற்காக பாதை அமைத்து தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா்.
மேற்படி மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்படாமல் விரிவாக்க பணி நடைபெற்றால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட வாய்ப்பிருப்பதால், அதை தடுக்கவும், சட்டம்- ஒழுங்கு பிரச்னை எழாத வகையில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தவும் திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், கிராம பொதுமக்கள் சாா்பாக சரண்யா, தனசேகரன், ஆரோக்கியசாமி, ஜோசப்லியோனி, மரியதாஸ் மற்றும் 10 நபா்கள், விமான நிலைய விரிவாக்கத்துறையினா் சாா்பாக முதுநிலை மேலாளா் மற்றும் அரசு சாா்பில் தனிவட்டாட்சியா், நில அளவை சாா்-ஆய்வாளா், வருவாய் ஆய்வாளா், திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா், வேங்கூா் பகுதி வருவாய் ஆய்வாளா், கீழக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா், திருவெறும்பூா் முதல் நிலை காவலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது. சாலை உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முத்தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.