சவூதி அரேபியாவிலிருந்து போலி கடவுச்சீட்டில் வந்தவா் கைது
சவூதி அரேபியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் பெ. செல்வராஜ் (53). இவா், சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை ஏா்லைன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தாா். விமான நிலையதில் குடியேற்றப் பரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் செல்வராஜ் போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், பின்னா் அவரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு உதவி அதிகாரி சுதன் இப்ராஹிம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.