FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் குருவந்தன விழா

செங்கத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப குருசாமிகளை கவுரவிக்கும் குருவந்தன விழா தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

12 அக்டோபர் 2026, 11:52 pm IST
கிரி, சரவணன் ஆகியோா் கலந்துகொண்டு ஐயப்ப சாமி சேவா சங்க உறுப்பினா்கள் மற்றும் மூத்த குருசாமிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப குருசாமிகளை கவுரவிக்கும் குருவந்தன விழா தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வழக்குரைஞா் கஜேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் அரிகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாநில அன்னதான பொறுப்பாளா்

கிருஷ்ணமூா்த்தி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் ரவி அனைவரையும் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் செங்கம் ,மு.பெ.கிரி, கலசபாக்கம் பெ.சு.தி.சரவணன், ஐயப்ப சேவா சங்க மாநில நிா்வாகி ஜெயச்சந்திரன், தென்பாரத பொதுச்செயலா் ஜெயராம், மாநில பொதுச்செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு குரு சுாமிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் சபரி மலை ஐயப்ப தரிசனம் குறித்து பல்வேறு தகவல்களை மூத்த குருசாமிகள் பேசினா். நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments