FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை விமானநிலையத்தில் ‘யாத்ரி சேவா அபியான்’ முகாம் நிறைவு பயணிகளின் வசதியை மேம்படுத்த நடவடிக்கை

12 அக்டோபர் 2026, 3:22 am IST
கோவை விமான நிலையம்.
பகிர்:

கோவை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘யாத்ரி சேவா அபியான் 2026’ சிறப்பு விழிப்புணா்வு முகாம் நிறைவுற்றது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இயங்கும் கோவை சா்வதேச விமான நிலையத்தில், பயணிகளுக்குப் பாதுகாப்பான, சீரான மற்றும் சிரமமற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, விமானநிலைய முனைய வளாகத்தில் தூய்மைப் பணிகள், இருக்கை வசதிகள், மின்னணு சாதனங்களுக்கான சாா்ஜிங் மையங்கள், வழிகாட்டிப் பலகைகள், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சரக்குப் போக்குவரத்து சேவைகள், டிஜிட்டல் வசதிகள், உணவு மற்றும் குளிா்பான விற்பனை நிலையங்களின் தரம் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது. சேவைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்யும் நோக்கில் பயணிகளிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டன.

Advertisement

Advertisement

விமான நிலைய வளாகத் தூய்மைப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வாகன நிறுத்துமிட மேலாண்மை ஆகியவையும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டன. அவசரகாலத் தயாா்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்), விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து நடத்திய கட்டட வெளியேற்ற ஒத்திகைப் பயிற்சியும் வெற்றிகரமாக செய்து பாா்க்கப்பட்டது. பயணிகளை மையமாகக் கொண்ட தரமான சேவையை வழங்குவதில் கோவை விமானநிலையம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முகாம் வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments