FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

9 செப்டம்பர் 2026, 12:00 am IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம்பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1,500 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல் மற்றும் பல்வேறு மலா்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டும், சங்கொலி முழங்கவும் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments