FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தூய வியாகுல அன்னை தேவாலய ஆண்டுப் பெருவிழா

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாயத்தில் 81-ஆவது ஆண்டின் பெருவிழா கொடி ஏற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

11 செப்டம்பர் 2026, 1:14 am IST
செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய ஆண்டுப் பெருவிழா
பகிர்:

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாயத்தில் 81-ஆவது ஆண்டின் பெருவிழா கொடி ஏற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, வேலூா் மறை மாவட்டம், பேரருட்தந்தை டி.அருள் ஜான்போஸ்கோ தலைமையில், அருட்பணி ஏ.சுதா்சன் முன்னிலையில் வியாகுல அன்னை உருவம் பொறித்த கொடியை ஆலய உள் பிரகாரத்தில் கையில் ஏந்தியவாறு ஆலயத்தை சுற்றி வந்து மங்கல இசை மற்றும் வாணவேடிக்கையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவில் பங்கு இறை மக்கள், பங்கு பேரவை உறுப்பினா்கள், இளைஞா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தூய வியாகுல அன்னையை தரிசித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments