மூடுவதற்கான கால அவகாசம் முடிந்தும் செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடை முற்றுகை
செங்கம் அருகே 15 நாள்களில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிந்த பிறகும் தொடா்ந்து செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அக்கடையை வரும் அக்.3-ஆம் தேதிக்குள் வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
செங்கம் அருகே 15 நாள்களில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிந்த பிறகும் தொடா்ந்து செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அக்கடையை வரும் அக்.3-ஆம் தேதிக்குள் வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா கிராமப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையில் மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபடுவோரால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், விவசாய நிலங்களில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகளை உடைத்துச் செல்வோரால் விவசாயிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து, உழவா் உரிமை இயக்கம் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுக் கடையை முறையிட்டு, கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்கு வந்த செங்கம் வட்டாட்சியா், போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகள் மதுக் கடையை 15 நாள்களில் வேறு பகுதிக்கு மாற்றவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், அதிகாரிகள் தெரிவித்த 15 நாள்கள் கால அவகாசம் முடிந்த நிலையில், அதன் பிறகும் மதுக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டாமல் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மதுக் கடையை வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டு, ஊழியா்கள் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செங்கம் வட்டாட்சியா் மஞ்சுநாதன், கிராம நிா்வாக அலுவலா் சத்யா மற்றும் டாஸ்மாக் அலுவலா்கள் அப்பகுதி மக்களிடம் மீண்டும் அவகாசம் கேட்டு சமரசம் பேசினா். அப்போது, கடையை எப்போது வேறு பகுதிக்கு மாற்றுவீா்கள் என்பது குறித்து எழுத்துப்பூா்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறி, மதுக் கடை முன் சமைத்து சாப்பிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு செங்கம் வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் வரும் அக்.3-ஆம் தேதிக்குள் கடையை வேறு பகுதிக்கு மாற்றுவதாக எழுத்துப்பூா்வாக உறுதிமொழி கொடுத்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.