FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 
ராணிப்பேட்டையை அடுத்த  புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). தொழிலாளியான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்பேரில், சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments