FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்ற ஆற்காடு தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

நல்லாசிரியர் விருது பெற்ற ஆற்காடு தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஆற்காடு தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.வேண்டாமணி.  இவருக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, ஆற்காடு அதிமுக ஒன்றியக் குழு தலைவர் எம்.குட்டி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் என்.சாரதி, பி.சங்கர், ஏ.ஜெயக்குமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் தண்டபாணி, பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவர் என்.குமரரேசன் வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சி.சேகர் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை வேண்டாமணியை பாராட்டிப் பேசினர். தலைமை ஆசிரியை எம்.வேண்டாமணி ஏற்புரை வழங்கினார்.   விழாவில் ஆசிரியர்கள், கல்விக் குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments