FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சிலை ஊர்வலப் பாதையில் அதிரடிப்படை போலீஸார் அணிவகுப்பு

விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளில் அதிரடிப்படை போலீஸார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளில் அதிரடிப்படை போலீஸார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,556 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் சனிக்கிழமை முதல் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. விசர்ஜன ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், ஊர்வலத்தை அமைதியாக நடத்திடவும் போலீஸார்அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் ஊர்வலம் நடைபெறும் பாதைகளில் போலீஸார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். வேலூரில் நடைபெற்ற அணிவகுப்புக்கு வேலூர் உட்கோட்ட டி.எஸ்.பி. ஸ்ரீதரன் தலைமை வகித்தார். 
சைதாபேட்டை முருகன்கோயில் அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு மெயின் பஜார், லாங்குபஜார், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை வழியாக கொணவட்டத்தில் நிறைவடைந்தது. காவல் ஆய்வாளர்கள் லோகநாதன், நாகராஜ், நந்தகுமார் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments