FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வியாபாரிகளுடனான அணுகுமுறை நல்லிணக்க நிகழ்ச்சி

திருப்பத்தூரில் வருமான வரித் துறை சார்பில் அனைத்து வியாபாரிகளுடனான  அணுகுமுறை நல்லிணக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருப்பத்தூரில் வருமான வரித் துறை சார்பில் அனைத்து வியாபாரிகளுடனான  அணுகுமுறை நல்லிணக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வேலூர் கூடுதல் வருமான வரி ஆணையர் சுப்ரியோ பால் தலைமை வகித்தார். அத்துறையைச் சார்ந்த  ராஜேஷ் பாலேக்கர், பட்டாபிராமன், தயராம்குமார், பூரண் சந்த் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் வருமான வரி ஆணையர் சீண்டலா சியாம்பிரசாத் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, வியாபாரிகள் தாங்கள் செய்யும் வியாபாரத்துக்கு, சரியான கணக்கு புத்தகங்களை வைத்து முறைப்படி வருமான வரி செலுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி தாக்கல் செய்யும்போது, அபராதத்தைத் தவிர்க்கலாம், ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் அனைவரும், அந்த ஆண்டு முடிவதற்குள் நான்கு தவணைகளாய் மொத்த வரி செலுத்துவதன் மூலம் அபராத வட்டியை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் நகை, பெட்ரோல், மளிகை வணிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தணிக்கையாளர் ரவிகுமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments