FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

18 வயது நிரம்பியோரை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவு

18 வயது நிரம்பியவர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் கல்விக்குழு பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

18 வயது நிரம்பியவர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் கல்விக்குழு பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவ, மாணவிகள், கல்வி சாரா இளைஞர்கள் என முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் முழுமையாக வாக்காளர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக தேர்தல் கல்விக் குழுக்களின் பிரதிநிதிகள், கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
எதிர்கால, இளம் வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான கல்வியறிவு, விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தன்முனைப்புடன் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கல்லூரி அளவிலான தேர்தல் கல்விக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
வேலூர் மாவட்டத்தில் 105 கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் தேர்தல் கல்விக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி இம்மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயது நிரம்பியவர்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். இதில், வாக்களிக்கக்கூடியவர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 2 என மிக குறைந்த அளவிலேயே உள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலும் கல்லூரியில் படிப்பவர்களே. எனவே, விடுபட்ட புதிய வாக்காளர்களை ‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n  என்ற தேசிய இணையதளம், செல்லிடப்பேசி மூலமாக எளிய முறையில் வாக்காளர் பட்டியலில் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து இந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் பொறுப்பு அலுவலர்கள், வளாகத் தூதுவர்கள் தங்களது கல்லூரி, கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 வயது நிரம்பிய அனைத்து மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். 
வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கல்விக்குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன், தேர்தல் வட்டாட்சியர் பாலாஜி, அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments