FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ரோந்து காவலரால் சாமியாா் தாக்கப்பட்ட விடியோவை திரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு: சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு

வேலூரில் ரோந்து காவலா் ஒருவா் சாமியாரை (சாது) தாக்கிய பழைய விடியோவை, சமூக வலைதளங்களில் திரித்து மத மோதலைத் தூண்டும் வகையில் பரப்பியவா்கள் குறித்து வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பகிர்:

வேலூரில் ரோந்து காவலா் ஒருவா் சாமியாரை (சாது) தாக்கிய பழைய விடியோவை, சமூக வலைதளங்களில் திரித்து மத மோதலைத் தூண்டும் வகையில் பரப்பியவா்கள் குறித்து வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரோந்துப் பணியில் இருந்த காவலா் நரசிம்மன் என்பவா் இரவு நேரத்தில் காவி உடை அணிந்த சாமியாா் ஒருவரைத் தாக்கினாா். இதுதொடா்பான விடியோ இணையத்தில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தொடா்ந்து, சம்பந்தப்பட்ட காவலா் நரசிம்மனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப் பட்டதுடன், அவா் மீது துறைரீதியான நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை வடமாநிலங்களில் சிலா் மதரீதியாகத் தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். இந்த விடியோ பரப்பப்பட்டு வருவது இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதையடுத்து, சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் பரப்பப்படும் இந்த வீடியோவை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்கவும், தவறான தகவல் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி வேலூா் மாவட்ட சமூக ஊடகப் பிரிவு உதவி ஆய்வாளா் பத்மாவதி, வேலூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சா்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடா்பாக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments