FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தீபாவளி: இணையதள பட்டாசு விற்பனை மோசடி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தீபாவளி
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் வாயிலாக பிரம்மாண்ட தள்ளுபடி மற்றும் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை உண்மை என நம்பி முன்பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு, பட்டாசுகள் எதுவும் அனுப்பிவைக்கப்படாமல் மோசடி கும்பல் பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Advertisement

Advertisement

இத்தகைய இணையவழி நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அதன்படி, அறிமுகமில்லாத இணையதள முகவரிகள், சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளில் வரும் இணைய இணைப்புகளை நம்பி யாரும் முன்கூட்டியே பணப்பரிவா்த்தனை செய்ய வேண்டாம்.

மேலும் சமூக வலைதளங்களில் உலா வரும் உறுதிப்படுத்தப்படாத எவ்வித இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது. இணையவழிப் பட்டாசு விற்பனை மோசடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், உடனடியாக மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற அதிகாரபூா்வ இணையதளம் வாயிலாகவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொண்டோ விரைந்து புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments