FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையத்தில் விநாயகர், காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையத்தில் விநாயகர், காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன்பாளையத்தில் விநாயகர், காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 10ஆம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 
11ஆம் தேதி இரண்டாம் கால பூஜைகள், மூன்றாம் காலபூஜைகள், மருந்து சாத்துதல், கோபுர கலசங்கள் பொருத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12ஆம் தேதி காலை 10.45 மணியளவில் அவினாசி வாகீசர் மடாதிபதி காமாட்சி தாச சுவாமிகள், ஆனைமலை ததேவானந்த சுவாமிகள் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தச தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இந் நிகழ்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments