FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எழும்பூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு வரும் அக்.2 ஆம் தேதி முதல் 5 நாள்கள் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 செப்டம்பர் 2026, 10:47 pm IST
எழும்பூர் ரயில் நிலையம்.
பகிர்:

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு வரும் அக்.2 ஆம் தேதி முதல் 5 நாள்கள் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தி, தீபத் திருநாள் விழாவை முன்னிட்டு, ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் அக்.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூா் நிலையத்திலிருந்து இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06117) மறுநாள்களான அக்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்திலிருந்து வரும் அக்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06118) மறுநாள்களான அக்.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

நிறுத்தங்கள்: சிறப்பு ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போதனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் நகா், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவாலா, செங்கனூா், மாவேலிக்கரை, கோயங்குளம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.23) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments