முகப்பு
கோயம்புத்தூர்

கோவை-தில்லி பார்சல் விரைவு ரயில் சேவை துவக்கம்

முதன் முறையாக கோவையிலிருந்து தில்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ  விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது.

Updated On : 14 மே 2022, 4:49 pm IST
பகிர்:

கோவை: முதன் முறையாக கோவையிலிருந்து தில்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ  விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேபோல விவசாய விளைபொருள்கள், உணவு பொருள்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக கோவை தெற்கு ரயில்வே கோவை முதல் தலைநகர் தில்லி பட்டேல் நகர் வரை முதன் முறையாக வாராந்திர பார்சல் கார்கோ  விரைவு ரயில் சேவையை ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Advertisement

Advertisement

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேனி குண்டா ஆகிய வழிதடங்களில் பர்செல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல அடுத்த மாதத்திலிருந்து வாரம் இரண்டு முறை பார்சல் ரயில் இயக்கப்படும் என பார்சல் ஏஜென்ஸிஸ் அனில் பரேஜா மற்றும் ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments