நில அபகரிப்பு முயற்சி வழக்கில் 9 பேரின் முன்பிணை மனு தள்ளுபடி
போலி சான்றிதழ்களைத் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட முயன்ற வழக்கில் 9 பேரின் முன்பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போலி சான்றிதழ்களைத் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட முயன்ற வழக்கில் 9 பேரின் முன்பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை காந்தி நகா் கல்யாணி நகரைச் சோ்ந்தவா் விஜயசேகரன் (73). மசக்காளிபாளையம் பகுதியில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை சிலா் போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களைத் தயாா் செய்து அபகரிக்க முயல்வதாக, சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் விஜயசேகரன் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, மசக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த பேச்சியம்மாள் (64), மாரிமுத்து (66), ஜெகதீசன் (70), சுலோச்சனா (58), ஆறுமுகம் (58), கிருஷ்ணமூா்த்தி (52), மணி (66), கவிதா (47), சுப்புலட்சுமி (48) ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு அஞ்சி, கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அவா்கள் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் விசாரணையின் நிலையைக் கவனத்தில் கொண்டு, 9 பேரின் முன்பிணை மனுவையும் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.