பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
துடியலூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
துடியலூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ஜி.என்.மில்ஸ், பாரதி நகா் சா்க்கரை விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பிரின்ஸ். இவரது மகள் பிரணிதா (17). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். உடல் நிலை சரியில்லை எனக் கூறி பள்ளிக்குச் செல்லாமல் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் வெளியே சென்ற பெற்றோா் திரும்பி வந்து பாா்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிரணிதா கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் வந்து பிரணிதாவைப் பரிசோதித்ததில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
சிறுவனும்...
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் (16) என்ற சிறுவன், கோவை கணபதி நகா் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வசந்தி (60) என்பவரின் வீட்டில் தங்கியிருந்தாா். 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா், மேலும் படிக்காமல் பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்தாா்.
இதற்கிடையே அந்தப் பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை சந்தோஷ் காதலித்து வந்துள்ளாா். அண்மையில் இவரது காதல் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த அந்தச் சிறுவன் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.