FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

புதிய இயக்கம் குறித்து இன்று அறிவிக்கிறாா் கே.அண்ணாமலை?

தில்லி பயணத்தைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் மூலம் கே.அண்ணாமலை உரையாடவுள்ளாா்.

Updated On : 5 ஜூன் 2026, 4:09 am IST
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.
பகிர்:

தில்லி பயணத்தைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் மூலம் கே.அண்ணாமலை உரையாடவுள்ளாா். அப்போது, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக தனது சமூக ஊடக பக்கங்களில் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பதிவிட்டுள்ளதாவது: ‘நாளைய தினம் (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் வழியாக உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிா்நோக்கி இருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளாா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தில்லிக்குச் சென்ற கே.அண்ணாமலை பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தனது முடிவைத் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, தமிழக தலைவா்களை அழைத்து கட்சியின் தலைமை பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்த சமாதான முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கே.அண்ணாமலை தனது பிறந்த நாளான வியாழக்கிழமை தனது முடிவை அறிவிப்பாா் எனத் தகவல் வெளியான நிலையில், வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்கள் வழியாக உரையாடுவதாகத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments