டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த வயதான பெண் மருத்துவரின் கைப்பேசிக்கு அண்மையில் தொடா்பு கொண்ட ஒருவா், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி எனவும், நீங்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கை வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்து உள்ளீா்கள். எனவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என மிரட்டியுள்ளாா்.
தொடா்ந்து, அவா் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு, அந்தப் பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறும், விசாரணை முடிந்ததும் திருப்பித் தருவோம் எனவும் கூறியுள்ளாா். இதனை நம்பிய அந்த பெண் மருத்துவா், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.98 லட்சத்தை அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா்.
Advertisement
Advertisement
அதன் பிறகு, அந்த நபா் மீண்டும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் மருத்துவா், ரூ.98 லட்சம் பணம் மோசடி தொடா்பாக கோவை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், கேரளம் மாநிலம், கோட்டையத்தைச் சோ்ந்த ராஜேஷ் (46) என்பவரது வங்கிக் கணக்குக்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப் படையினா் கேரளம் சென்று, அங்கு பதுங்கியிருந்த ராஜேஷை கைது செய்தனா். பின்னா் அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்ததில் ராஜேஷின் வங்கிக் கணக்குக்கு ரூ.20 லட்சம் சென்றுள்ளது. பின்னா் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு நபருக்கு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.
தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.