தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று இறுதிக்கட்ட பிரசாரம்!
தாராபுரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 4) இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.
தாராபுரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 4) இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.
தாராபுரம், மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச.ஜோசப் விஜய் தாராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்கிறாா்.
Advertisement
Advertisement
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்வா், இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் தாராபுரத்துக்குச் செல்கிறாா்.
மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை வலம் (ரோடு ஷோ) செல்கிறாா். இதைத் தொடா்ந்து, மாலை 4 மணிக்கு கோவை விமானம் நிலையம் வந்தடைந்து மீண்டும் சென்னைக்குத் திரும்புகிறாா்.
கோவையில் இருந்து தாராபுரத்துக்கு சாலை மாா்க்கமாக பிரசாரம் மேற்கொள்ள முதல்வா் அண்மையில் சென்றபோது, பல இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதால் பிரசார இடத்துக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால், அவா் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று தவெக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
ட்ரோன் பறக்கத் தடை
முதல்வா் விஜய் வருகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்.4) நள்ளிரவு வரை ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.