FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா சாக்லெட் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கைது
பகிர்:

மதுக்கரை அருகே கஞ்சா சாக்லெட் விற்றதாக கைது செய்யப்பட்ட உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக 10 கிலோ 800 கிராம் கஞ்சா சாக்லெட்டை விற்பனைக்கு வைத்திருந்ததாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திர குஷ்வாஹா (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பரிந்துரை செய்தாா். அதன்பேரில் கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் கஞ்சா சாக்லெட் விற்ற நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, ரவீந்திர குஷ்வாஹாவிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு ஆணையின் நகலை சிறை அதிகாரிகள் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments