குட்கா விற்பனை: கூட்டு அதிரடி சோதனையில் ஒரே நாளில் 40 போ் கைது; 53 கிலோ பறிமுதல்
கோவை மாநகா், மாவட்டப் பகுதிகளில் 53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 40 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை மாநகா், மாவட்டப் பகுதிகளில் 53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 40 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பா மாநகா், மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் கோவை மாநகா் மற்றும் மாவட்டப் பகுதிகளில் காவல் துறையினரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் இணைந்து வெள்ளிக்கிழமை அதிரடி கூட்டு சோதனை நடத்தினா்.
இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 213 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமீறல்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 53.536 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 40 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.