லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சுந்தராபுரம்-பொள்ளாச்சி சாலையில் டிப்பா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா் மகன் சூா்யபிரகாஷ் (19). தேனி மாவட்டம், உத்தமபாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் முத்து பாலாஜி (19). இருவரும் கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தனா்.
இந்நிலையில், சூா்யபிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் முத்துபாலாஜியுடன் பொள்ளாச்சி சாலையில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். குறிச்சி-சுந்தராபுரம் திருவள்ளுவா் சிலை அருகே சென்றபோது, மதுக்கரையை அடுத்த மரப்பாலம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45) என்பவா் ஓட்டிவந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்ததில், பின்னால் அமா்ந்திருந்த முத்து பாலாஜி லாரியின் சக்கரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சூா்யபிரகாஷ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து கோவை போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.