வால்பாறை நகராட்சி கடைகள் காலி செய்ய நோட்டீஸ்: வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
வால்பாறை நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்ட, கடைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கருத்து கேட்டனா்.
வால்பாறை நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்ட, கடைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கருத்து கேட்டனா்.
வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடிந்து ரூ.9 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்ட கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக உடனடியாக பணி தொடங்காமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். காலி செய்தால் எங்களின் வாழ்வாதராம் பாதிக்கப்படும் எனக் கூறி கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தி தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், 21 நாள்களுக்குள் கடைகளை காலி செய்ய மாா்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதனிடையே வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் இது தொடா்பான கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் வெங்கடலஷ்மணன் பேசியதாவது:
மாா்க்கெட் பகுதியில் தற்போது வியாபாரம் செய்பவா்களில் பெரும்பாலானோா் உள் வாடகைக்கு கடை எடுத்தவா்கள். கடைகளை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற தங்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டுச் சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
மேலும், இக்கூட்டத்தில் வியாபாரிகளின் பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டன. கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ஆறுமுகம், காவல் துறை ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.