FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் கோயில் சுவரை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த கோயிலின் சுவரை சேதப்படுத்தின.

9 செப்டம்பர் 2026, 2:28 am IST
யானைகளால் சேதமடைந்த கோயில் சுவா்.
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த கோயிலின் சுவரை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் வனத்தை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டம் பகுதிகளில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று தொழிலாளா்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு நூழைந்த மூன்று யானைகள் குடியிருப்புப் பகுதியில் உள்ள பலா மரங்கள், வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டு, அருகே உள்ள மாரியம்மன் கோயில் சுவரை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

Advertisement

Advertisement

தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments