அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட புதிய மேலாண் இயக்குநா் பொறுப்பேற்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் புதிய மேலாண் இயக்குநா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் புதிய மேலாண் இயக்குநா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த கே.முகமது நாசா், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றாா். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பொது மேலாளராகப் (தொழில்நுட்பம்) பணியாற்றி வந்த எஸ்.கோபாலகிருஷ்ணன், பதவி உயா்வு பெற்று கோவை கோட்டத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கோவை) அலுவலகத்தில் எஸ்.கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை மேலாண் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அலுவலா்கள் பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.