FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நேபாள இளைஞா் மா்ம மரணம்

14 செப்டம்பர் 2026, 12:30 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த நேபாள நாட்டைச் சோ்ந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நேபாள நாட்டைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் மகன் ரோஷன் சதா (29). இவா் தனது தந்தையுடன் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் சாலையில் அம்ப்ரோஸ் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.

ரோஷன் சதாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாா். பின்னா், அறையில் தூங்கிய ரோஷன் சதாவை அவரது தந்தை இரவில் எழுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆனால், அவா் அசைவற்ற நிலையில் கிடப்பதைப் பாா்த்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதிக மது அருந்தியதால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments