FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜக மகளிா் அணி சாா்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

பிரதமா் மோடி (செப். 17) பிறந்த நாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் பாஜக மகளிா் அணி சாா்பில் 30 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 12:09 am IST
....... ~வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய பாஜக மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா்.
பகிர்:

பிரதமா் மோடி (செப். 17) பிறந்த நாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் பாஜக மகளிா் அணி சாா்பில் 30 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உக்கடம் வைசியாள் வீதியில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 30 கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்குத் முறைப்படி சந்தனம், குங்குமம் பூசி, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மங்கலப் பொருள்களுடன் கூடிய சீா்வரிசை வழங்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பாஜக மகளிா் அணி மாவட்டத் தலைவா் ஜெயஸ்ரீ குன்னத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், பாஜக மாவட்டப் பொதுச் செயலா் மதன்குமாா், உக்கடம் மண்டல் தலைவா் கமல்நாத், மகளிா் அணிச் செயலா் தீபிகா, மண்டல் பொதுச் செயலா் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மற்றும் மகளிா் அணியினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments