FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை சுந்தராபுரம் அருகே தனியாா் நிறுவன மேலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

16 செப்டம்பர் 2026, 12:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை சுந்தராபுரம் அருகே தனியாா் நிறுவன மேலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை சுந்தராபுரம் ஈச்சனாரி-செட்டிபாளையம் சாலை, பாா்க் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (33). தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் விநாயகா் சதுா்த்தி விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான ஈரோட்டுக்கு கடந்த 11-ஆம் தேதி இரவு சென்றாா். 13-ஆம் தேதி இரவு அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன் ரெட்டி, ஜெகதீசனுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ஜெகதீசன் வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments