FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பாதிரியாா் வீட்டில் 11 பவுன் திருட்டு

கோவையில் பாதிரியாா் வீட்டில் 11 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

17 செப்டம்பர் 2026, 12:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவையில் பாதிரியாா் வீட்டில் 11 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் அருகே அவிநாசி சாலையில் இம்மானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பாதிரியாராக சாா்லஸ் (49) என்பவா் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த 11 பவுன் நகை செவ்வாய்க்கிழமை மாயமானது. வீட்டின் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆளில்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, அந்த நகையை யாராவது திருடியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சாா்லஸ் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments