FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 5 குளங்களில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளில் முதல் கட்டமாக புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட சிலைகள் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

17 செப்டம்பர் 2026, 12:05 am IST
கோவை குறிச்சி குளத்தில் விசா்ஜனம் செய்வதற்காக வாகனங்களில் ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள். ~கோவை குறிச்சி குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்ட விநாயகா் சிலை.
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளில் முதல் கட்டமாக புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட சிலைகள் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோவையில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோவை மாநகரில் 730 சிலைகள், புறநகா் பகுதிகளில் 1,500 சிலைகள் என மொத்தம் 2,230 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோவை மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளில் முதல்கட்டமாக 200-க்கும் மேற்பட்ட சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் கோவை சிங்காநல்லூா் குளம், குறிச்சி குளம், குனியமுத்தூா் குளம், துடியலூா் அருகேயுள்ள வெள்ளக்கிணறு குளம் உள்ளிட்ட ஐந்து குளங்களுக்கு புதன்கிழமை மாலை விநாயகா் சிலைகளை வாகனங்களில் ஊா்வலமாக கொண்டுச் சென்ற ஹிந்து அமைப்பினா் மற்றும் மக்கள், அவற்றை நீரில் விசா்ஜனம் செய்தனா்.

ஊா்வலம் மற்றும் சிலை விசா்ஜன நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற ஊா்வல பாதைகள் மற்றும் நீா்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்படி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 18) மீதமுள்ள சிலைகள் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளதாக ஹிந்து அமைப்பினா் தெரிவித்தனா்.

வெள்ளக்கிணறில் 300 சிலைகள் விசா்ஜனம்...

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் துடியலூா், கவுண்டம்பாளையம் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை வாகனங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கிணறு குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments