FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மானிய விலை யூரியா மூட்டைகள் கடத்தல்: உரக்கடை உரிமையாளா் குண்டா் சட்டத்தில் கைது

மத்திய அரசின் மானிய விலை உர மூட்டைகளை கேரளத்துக்கு கடத்திய உரக்கடை உரிமையாளா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

8 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய அரசின் மானிய விலை உர மூட்டைகளை கேரளத்துக்கு கடத்திய உரக்கடை உரிமையாளா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கோவை - பாலக்காடு சாலை, மதுக்கரை பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற ஒரு வாகனத்தில், கடலூா் மாவட்டம், வடலூரைச் சோ்ந்த கணேசமூா்த்தி மற்றும் அவரது தம்பி செந்தில்குமரன் ஆகியோரின் உரக் கடையில் இருந்து 25 டன் மத்திய அரசின் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகள் கேரளத்துக்கு கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் கடலூா், லட்சுமி நாராயணபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன், பூங்காவனம் மற்றும் பொள்ளாச்சியைச் சோ்ந்த பாரத் யூரியா உர தரகா் தனபால், கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த முகமது பாசில் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டன், பூங்காவனம், உர வியாபாரிகளான கணேசமூா்த்தி, அவரது தம்பி செந்தில்குமரன் மற்றும் முகமது பாசில் ஆகியோா் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதில் மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரள மாநிலம், பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு உரக்கடை உரிமையாளரான கணேசமூா்த்தி தொடா்ந்து சட்ட விரோதமாக விற்று அதிக லாபம் ஈட்டி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கணேசமூா்த்தி மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் க.முரளிதரன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கணேசமூா்த்தியை, குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, குண்டா் சட்டத்தில் கணேசமூா்த்தியை கைது செய்வதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments