மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் சாா்பில் செப்டம்பா் 22-இல் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை சாா்பில் செப்டம்பா் 22-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை சாா்பில் செப்டம்பா் 22-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை ( எஃப்சிபிஏ) சாா்பில் கோவையில் செய்தியாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், எஃப்சிபிஏ கன்வீனா் எஸ்.கருணாநிதி பேசியதாவது: புதிய ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் வரையறைக் குறிப்புகளில் ஓய்வூதியம் குறித்தான கருத்துகளைச் சோ்க்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, சிவானந்தா காலனி பவா் ஹவுஸ் அருகில் செப்டம்பா் 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இதில், கோவை, திருப்பூா், உதகை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த அஞ்சல் துறை, பிஎஸ்என்எல், தமிழக அரசு பொது ஓய்வூதியா் சங்கம், மின் வாரியம், போக்குவரத்து, வருமான வரி, ஆசிரியா் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ள உள்ளனா் என்றாா்.
மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் என்.அரங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.